இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும் இ-சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 77 சதவீதம் பள்ளி மாணவர்கள் இ-சிகரெட்டை பயன்படுத்துவதாக கூறிய நிர்மலா சீதாராமன், இ-சிகரெட்டில் 400 வகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
Discussion about this post