திரைப்படங்களை உரிய அனுமதியின்றி பதிவு செய்பவர்கள் மற்றும் பிரதி எடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் திரைப்படச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திருத்தத்தின்படி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 வருட சிறை தண்டனை, 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். பட உரிமையாளர் அனுமதியின்றி படத்தை பதிவு செய்தல், பிரதி எடுத்தல், அனுப்புதல் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தத்தினால் திருட்டு சிடி மற்றும் தொழில் நுட்பங்களை கொண்டு திரைப்படங்களை இணையத்தில் வெளியிடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.