மாடுகள் எந்த அளவுக்கு படம் பார்க்கிறதோ அந்த அளவிற்கு அதிகமாக பால் கறக்கு என ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுப் பிடித்துள்ளனர். இது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு
தற்போது மாடுகளுக்கு மவுசு அதிகமாகி வருகிறது. அயோத்தியில் மாடுகளுக்கு குளிருக்காக ஸ்வெட்டர் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யா வேறுவிதமான முயற்சியை செய்து கொண்டிருக்கிறது.
மாஸ்கோ கால்நடை ஆராய்ச்சியாளர்கள் இயற்கை சூழலுக்கும், மாடுகள் பால் கறப்பதற்கும் இடையே உள்ள தொடர்பை கண்டறிந்துள்ளனர். மாடுகள் தங்களுக்கு பிடித்தமானவற்றை பார்க்கும்போது அதன் பால் உற்பத்தி திறன் அதிகரிப்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.
மாடுகளுக்கான பிரத்யேக விர்சுவல் ரியாலிட்டி பாக்ஸ்களை உருவாக்கியிருக்கி, அதை மாடுகளின் முகத்தில் அணிவித்து விடுகின்றனர். அதில் வரும் காட்சிகளை பார்த்து மாடுகள் குஷியாகி விடுகிறதாம். இதற்காகவே மாடுகளுக்கு பிடித்த புல்வெளி, வயல் பரப்புகள், அழகான காலை நேரம் போன்ற காட்சிகள் அதில் தெரியும்படி செட் செய்துள்ளனர்.
சாதாரண நாட்களை விட இந்த படங்களை பார்க்கும் நாட்களில் மாடுகளின் பால் உற்பத்தில் மாற்றங்கள் தெரிவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மேலும் பல ஆய்வுகளையும் மாஸ்கோ கால்நடை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Discussion about this post