கொலை வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் மீதான தண்டனையை, கேரள உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி, அத்தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. 2009-ல் முகமது சலியா என்பவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக, முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த கவரட்டி செசன்ஸ் நீதிமன்றம், முகமது பைசல் குற்றவாளி என உறுதி செய்ததுடன், 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
Discussion about this post