ஆரணி அருகே மேஸ்திரி கடப்பாரையால் குத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 21 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்தனர்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சைதாப்பேட்டை கமண்டல நாகநதி தெருவைச் சேர்ந்த சுரேஷ் இவருக்கு வயது 41, கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார் இவர் கடந்த 18 ஆம் தேதி, முள்ளிப்பட்டு ஏரிக்கரை அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல்கள் அறிந்த டிஎஸ்பி செந்தில் தலைமையில் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளியையும் தேடிவந்தனர் இந்நிலையில் ஆரணி சைதாப்பேட்டை முள்ளிப்பட்டு ரோட்டைச் சேர்ந்த அஜித்குமார், என்ற 21 வயது இளைஞன் ஆரணி டவுன் விஏஓ ஜெயச்சந்திரன் இடம் சரண் அடைந்து, சுரேஷை கொலை செய்தது தான் தான் என்று கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதன் பின்பு அஜித் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கொலை செய்த அஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன…கொலை செய்யப்பட்ட சுரேஷ் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான கிருஷ்ணவேணி, என்பவரை கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணவேணி திடீரென சுரேசிடம் பேசுவதை நிறுத்தி விட்டு, அஜித்திடம் பேச ஆரபித்திருக்கிறார். கடந்த 6 மாதமாக அஜித்தும் க்ரிஷ்ணவேணியும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து சுரேஷ், கடந்த வாரம் கிருஷ்ணவேணி இடம் சண்டை போட்டுள்ளார்.
சுரேஷை தொந்தரவு செய்வது குறித்து அஜித்திடம் கிருஷ்ணவேணி கூறியுள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன் படி கடந்த17 ம் தேதி கிருஷ்ணவேணி, சுரேஷை தொடர்புகொண்டு, நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வா, என ஆசை வார்த்தை கூறி அழைத்தார். இதை உண்மை என நம்பி காதலி சொன்னபடி, முள்ளிப்பட்டு ஏரிக்கரை அருகே சென்றார். அவரது பின்னால் கிருஷ்ணவேணியும்,அஜித்தும் சென்று மறைத்து வைத்திருந்த கம்பால் சுரேஷின் மண்டையில் அடித்தும் பின்னர் கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டியும் கொலை செய்தனர். இதையடுத்து அஜித்குமாரை கைது செய்து, ஆரணி நீதிபதி மகாலட்சுமி முன்னிலையில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணவேணியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
Discussion about this post