நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 47 ஆயிரத்து 609 கோடி டாலராக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் அன்னிய செலாவணி இருப்பு 309 கோடி டாலர் வரை அதிகரித்து, 47 ஆயிரத்து 609 கோடி டாலராக உயர்ந்து காணப்பட்டது. தற்போது 47 ஆயிரத்து 612 கோடி டாலராக அன்னிய செலாவணி இருப்பு உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு 53.9 கோடி டாலர் அதிகரித்து, 2 ஆயிரத்து 966 கோடி டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 2 லட்சம் கோடி ரூபாய் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Discussion about this post