தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்குறைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் தொழில் தொடங்குவதற்காக வழங்க தயாராக உள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அமெரிக்க- இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் தலைமை செயலகத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அடுத்து நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியில் அமெரிக்க இந்திய தொழில் கூட்டமைப்பு பெரும் பங்காற்றும் எனவும் தமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலம் நிலவுவதாகவும் துணை முதல்வர் கூறினார்.
தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழகம் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்த அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்க-இந்திய துணை கூட்டமைப்பு தலைவர் மிசா பிஸ்வால், அமெரிக்க இந்திய துணை கூட்டமைப்பு வேளாண்மை இயக்குனர் அம்பிகா சர்மா, தமிழக அரசின் நிதித்துறை தலைமை கூடுதல் செயளாலர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
Discussion about this post