செப்டம்பர் 1 ம் தேதி முதல் இயங்கும் மாநகரப் பேருந்துகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கையுறையுடன், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்படும் என்றும், பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பேருந்தில் ஏறும்போது பேருந்தில் வைக்கப்பட்டுள்ள கிருமிநாசினிகள் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து பேருந்தின் பின்புறமாக ஏறி, முன்புறமாக இறங்க வேண்டும் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. பேருந்துகளையும், பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களை நாள்தோறும் இரண்டுமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Discussion about this post