சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நடைபாதை கற்கள் சிதிலமடைந்தும், பெயர்ந்தும் காட்சியளிப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். நீண்ட நாட்களாக நடைபாதை சிதிலமடைந்து கிடப்பதாகவும், பல பேர் கற்களின் மேல் விழுந்து அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று செல்வதாக கூறும் பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகம் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post