அந்தியூர் மேற்கு மலைக்கு பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளதற்காக தமிழக அரசுக்கு பழங்குடியினர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலையில் உள்ள மேற்குமலையில் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். நீண்ட ஆண்டுகளாக இம்மக்கள் பேருந்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தநிலையில், தாமரைக்கரையிலிருந்து கொங்காடை வரை பேருந்து சேவை வெள்ளோட்டம் துவக்கப்பட்டது. கை தட்டியும், பட்டாசு வெடித்தும் பேருந்தை மக்கள் வரவேற்றனர். பேருந்து சேவையை வழங்கிய அரசுக்கும் நன்றி தெரிவித்துகொண்டனர்.
Discussion about this post