16 கிலோ மீட்டர் தூரம் சென்று 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதி வந்த நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், ஆணைக்கட்டியை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சின்ன தடாகத்தில் உள்ள பள்ளியில் எழுதி வருகின்றனர். இதற்காக அவர்கள் 16 கிலோ மீட்டர் சென்று தேர்வெழுதி வந்தனர். இந்த ஆண்டு மாணவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், பள்ளி தலைமை ஆசிரியரும் நன்றி கூறியுள்ளனர்.
Discussion about this post