சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோடை விடுமுறைக்குப் பிறகு அரசு கல்லூரிகளில் வகுப்புகள் இன்று தொடங்கின. இதையொட்டி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அயனாவரம் நியூ ஆவடி சாலை வழியாக சென்ற தடம் எண் 47 A பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தப்படி மாணவர்கள் பஸ் டே கொண்டாடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த சரத்குமார், சுரேஷ்குமார், குணசேகரன் ஆகியோரையும் அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் 2 பேர் முன்னாள் மாணவர்கள் என்பது தெரிய வந்தது. பஸ் டே கொண்டாடியது தொடர்பாக 17 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
Discussion about this post