ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. கிஸ்த்வார் மாவட்டம் கேஸ்வான் என்ற இடத்திலிருந்து கிஸ்த்வாருக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவித்து ஆளுநர் சத்யபால் மாலிக் உத்திரவிட்டுள்ளார்.மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post