சட்டமன்றத்தில் ஜான்பாண்டியனை ஒருமையில் பேசியதாக ஸ்டாலின், துரைமுருகனின் உருவ பொம்மைகளை எரித்து திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் சிலநாட்களுக்கு முன்பு, ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியனை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக அறியப்படுகிறது. அதனைக் கண்டித்து திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு, ஸ்டாலின், துரைமுருகன் இருவரது உருவ பொம்மைகளை எரித்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்டாலின், துரைமுருகனை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.