இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா. கடந்த ஆண்டு அவருக்கு ஏற்பட்ட முதுகு பகுதியின் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து அப்போது விலகினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு உலக கோப்பை, ஆசிய கோப்பை என முக்கியமான தொடர்களில் பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதுபோன்றே மக்கள் அனைவரும் பும்ரா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைவார் என்று எதிர்பார்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. ஏனென்றால் அவரது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயமே காரணம் என்றனர். இதனை அடுத்து அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலாவது இடம் பெறுவாரா? என்று எதிர்பார்த்த வேளையில் அப்போதும் அவர் அணிக்கு விளையாடவில்லை.
பும்ரா எப்போதுதான்? கம்பேக் கொடுப்பார் என்ற கேள்விகள் எழ ஆரம்பித்தது. இதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக இந்திய அணியில் காயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட் என்பது அதிகரித்து உள்ளது. அந்த வகையில் ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். இதனை தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே கிடைத்த இந்திய அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பும்ரா இந்திய அணிக்கு திரும்ப இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ரசிகர்களுக்கு கிடைத்த நற்செய்தி!!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2016- ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். மேலும் அவர் ’அறுபது’ சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், அவருக்கு ஏற்பட்டு இருந்த முதுகுவலி பிரச்சனைகள் குணமாகிய சூழலில் அயர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் டி20 சர்வதேச போட்டிகளில் பும்ராவை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அந்த செய்தி குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், பும்ரா களத்தில் இறங்கி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்கிராம் பக்கதில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ‘கம்மிங் ஹோம்’ என்ற பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து அவர் விளையாடும் மற்றும் பந்து வீசும் படங்களை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த செய்தியை நெட்டிசன்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.