திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நடைபெற்ற காளை விடும் விழா நிகழ்ச்சியை, ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். செங்கத்தை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில், காளை விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் புதுப்பாளையம், கடலாடி உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. சீறிப் பாய்ந்த காளைகளை ஏராளமான மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் வெற்றி பெற்ற காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு, விழா குழு சார்பில் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.
Discussion about this post