திருமஞ்சன கோபுரம் வீதியில் கதர் கிராமத் தொழில் மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் காதிகிராப்ட் பொருட்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது. கட்டிடத்தின் கீழ் பகுதியில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கட்டிடம் திடீரென சரிந்தது. இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், இடிபாடுகளில் சிக்கிய பரிமளா என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தற்போது அதன் சிசிடிவி காட்சிப் பதிவுகள் வெளியாகி உள்ளன. கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
Discussion about this post