மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழகம், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற 5 மாநிலங்களில் தெல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்தார். மேலும், கீழடி அகழாய்வு உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படுவதன் மூலம், தமிழரின் பெருமை உலகப் பார்வையைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post