மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றக் கூடிய பட்ஜெட்டை, மத்திய அரசு தாக்கல் செய்து விட்ட அதிர்ச்சியில், எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ரபேல் விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது என்று தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க கூடிய வகையில் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
Discussion about this post