ஆண்டுதோறும் இந்திய நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடரானது பிப்ரவரி மாதத்தின் முதல்வாரத்தில் துவங்கும். தற்போது இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம்துவங்க உள்ளது. எனவே, 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதை குறிக்கும் வகையில், பாரம்பரியமாக அல்வா வழங்கும் விழா நடைபெற்றது.
மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கும் விதமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழியர்களுக்கு அல்வாவை பரிமாறினார்.
Discussion about this post