தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று துவங்குகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 8 ஆம் தேதி, 2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள், மின்சார பேருந்துகள் இயக்கம், அப்துல் கலாம் பெயரில் கல்லூரி என பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்றிலிருந்து வரும் 13 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. பட்ஜெட்டின் கூட்டத்தொடரின் இறுதிநாளான வரும் 14 ஆம் தேதியன்று, பட்ஜெட் மீதான விவாதம் குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் உரைக்க உள்ளார்.
Discussion about this post