கோவை விமான நிலையத்தில் இருந்து உப்பிலிபாளையம் வரை, ஆயிரத்து 620 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட சாலை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையம் முதல் உப்பிலிபாளையம் வரையுள்ள அவினாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட சாலைகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன் பணம் வழங்குவதற்காக 173.95 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post