2020-21ம் ஆண்டின் வரவு – செலவு திட்ட மதிப்பீடுகள், இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 992 புள்ளி 78 கோடி ரூபாயாக இருக்கும் என, துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் 10 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.. 2020 -21 நிதியாண்டிற்காக மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியம் 37 ஆயிரத்து 96 புள்ளி 69 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு 59 ஆயிரத்து 209 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதேபோல், 2020-21ம் ஆண்டில் அரசின் சொந்த வரி வருவாய் மீதான மொத்த வரவினங்கள் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 530 புள்ளி 30 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரசின் வரியல்லாத வருவாய் வரவினங்கள் 15 ஆயிரத்து 898 புள்ளி 81 கோடியாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2020-21ல் 21 ஆயிரத்து 617 புள்ளி 64 கோடியாக மதிப்பிடப்பட்ட வருவாய் பற்றாக்குறை 2021-22ல் 16 ஆயிரத்து 893 புள்ளி 19 கோடியாக குறையும் எனவும், 2022-23ம் ஆண்டில் 10 ஆயிரத்து 970 புள்ளி 47 கோடியாகவும் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
Discussion about this post