புத்தரும் அதன் வரலாறும்:
கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவருக்கு, அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாக இருக்கிறது. புத்தரின் கோட்பாடானது நமது வாழ்கை முறையில் சிறந்த தெளிவையும், தன்னம்பிக்கையும் தருபவையே ஆகும். இன்னும் சொல்லப்போனால் சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்திற்கு பின்பற்றினார். ஏனெனில், புத்த மதம் ஒரு பகுத்தறிவு மற்றும் நவீன மனப்பான்மை கொண்டது என்று அவர் நம்பினார். இப்படியாக புத்தரை பற்றிய வரலாறு இருக்க அவரின் சிலைகள் மற்றும் அவரின் உருவத்தினை பற்றி அனைவருக்கும் வெவ்வேறு வகையான கருத்துகள் உள்ளன. நம் இந்தியாவில் பழங்கால பொருட்கள் மற்றும் பழங்கால சிலைகள் என நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
புத்தர் சிலை மீட்பு:
தஞ்சாவூர் மாவட்டதில் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 200 கிலோ எடையுள்ள பழங்கால கருங்கல் புத்தர் சிலை கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் இருப்பதை பார்த்தனர் அங்கு மீன் பிடிக்க சென்ற மீனவ மக்கள. கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொள்ளிட ஆற்றின் இருகரையின் ஓரங்களில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த ஆற்றில் தண்ணீர் வரும்போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீன் பிடிப்பது வழக்கம். அதுபோலவே இன்று அதிகாலையில் கொள்ளிட ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, ஆற்றின் நடுவிலுள்ள மணல் திட்டில் சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட, சுமார் 200 கிலோ எடையுள்ள பழங்கால கருங்கல்லிலான புத்தர் சிலை இருப்பதை பார்த்தனர், மீன் பிடுக்க வந்தவர்கள். புத்தர் சிலையை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தியை அம்மக்கள் அனைவரும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வட்டாட்சியர் பூங்கொடி சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகர், சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட கொள்ளிட ஆற்றை பார்வையிட்டனர். அப்போது கொள்ளிட ஆற்றில் சுமார் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி இருந்ததால் தீயணைப்பு துறையினர் உதவியுடன் புத்தர் சிலையை மீட்டனர்.