பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பெற்ற வழக்கு – அக்டோபர் 25 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 25 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சென்னை பிஎஸ்என்எல்லின் அதிவேக இணைப்புகளை முறைகேடாக வழங்கியதில் அரசுக்கு ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

 இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேருக்கு எதிராக சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், வேதகிரி கௌதமன், கண்ணன், ரவி உள்ளிட்ட 5 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கலாநிதி மாறன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள், அமீத் தேசாய், நீரஜ் கிஷன் கவுல் உள்ளிட்டோர் ஆஜராகி, வாதிட்டனர்.

குற்றஞ்
சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வாதங்கள் முடிவடையாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு ஒத்துவைத்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். அன்று தொடர்ந்து மனுதரார்கள் தரப்பில் வாதிடவும்,
அதனை தொடர்ந்து
சிபிஐ தரப்பில் பதில் வாதங்களை எடுத்துவைக்கவும் உத்தரவிட்ட அவர்,

அதுவரை விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுத்தியுள்ளார்.

Exit mobile version