நாமக்கல்லில் பச்சிளம் குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராசிபுரத்தில் குழந்தைகளை எடைபோட்டு, நிறம் பார்த்து குழந்தைகளை, பிறப்பு சான்றிதழுடன் பத்திரப்பதிவு செய்து விற்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஏழை குழந்தைகள், தவறான நடத்தையால் பிறக்கும் குழந்தைகளை, இடைத்தரகர்கள் வாங்கி, விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இதனிடையே ராசிபுரத்தில், ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா குழந்தை விற்பனை தொடர்பாக ஒரு தம்பதியிடம் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் குழந்தைக்கு எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து அந்த தம்பதியிடம் அமுதா விளக்குகிறார்.
இந்தநிலையில் குழந்தை விற்பனை குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 3 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக அமுதா வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்கான குழந்தைகளை ஏதும் கடத்தினார்களா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post