பிரிட்டனில் வரும் 12ம் தேதி பிரதமருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரிட்டனில் வாழும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களின் வாக்குகளை கவரும் விதமாக அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என பிரிட்டன் தீவிரமாக முயற்சித்து வருகிறது. குறிப்பாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த சூழலில் தான் பிரிட்டன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அங்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் உழைப்பாளர் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடைமுறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். ஒருவேளை தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றால் பிரக்சிட் காலதாமதம்ஆகலாம். இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் அமைதியும் சமத்துவமும் நிலவ கன்சர்வேடிவ் கட்சி பாடுபடும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கை சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளில் இருநாடு கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆளுங்கட்சியின் இந்த தேர்தல் அறிக்கைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் அறிக்கையை வாபஸ் பெறவும் இலங்கை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் ஒன்றரை லட்சம் வாழ் இலங்கைத் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே கன்சர்வேடிவ் கட்சியினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Discussion about this post