கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றிருந்தார். மேலும் இவர்தான் இந்திய வம்சாவளியில் வந்த முதல் இங்கிலாந்து பிரதமர் ஆவார்.சமீபத்தில் ரிஷி சுனக் தனது காரில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டு செல்லும் காணொளியானது சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வந்தது. அந்த காணொளியில் ரிஷி சுனக், கார் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது தன்னுடைய சீல்ட் பெல்ட்டை அணியாமல் பேசி வந்துள்ளார். காரில் செல்லும்போது சீல்ட் பெல்ட் அணியாதது சட்டப்படி குற்றமாகும். இந்த காணொளி பலரால் பகிரப்பட்டு வந்தந்தையொட்டி, பிரதமர் காரில் கேமிராவைப் பார்த்து பேசிக்கொண்டு சீல்ட் பெல்ட் அணியாமல் இருக்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்தின் பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. அதில், பிரதமர் ரிஷி சுனக் அவர்கள், காரில் சீல்ட் பெல்ட் அணியாமல் பயணித்தது சட்டப்படி குற்றம் மற்றும் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாகும், அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் இந்த தவறுக்காக பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு 500 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த அபராதத் தொகை இந்திய மதிப்பில் 50,000 ரூபாயாகும்.
Discussion about this post