பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தை அரசி எலிசபெத் முடக்கி வைத்தார். இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதம் என பிரிட்டன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தை முடக்கப் பிரதமருக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் அவையைக் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தின் மக்களவை, பிரபுக்கள் அவை ஆகியவற்றின் தலைவர்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஹேல் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post