கிருஷ்ணகிரியில் கத்தரிக்காய் மகசூல் அதிகரித்துள்ள நிலையில் அதன் விலை சரிந்து காணப்படுவதால் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையின் மேற்புறத்தில் உள்ள விவசாயிகள் முள்ளங்கி, வெண்டை, கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறி சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருடம் அதிக விளைச்சல் காரணமாக கத்தரிக்காய் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முதல் தர கத்திரிக்காயை விவசாயிகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். வெளி மாநிலத்திற்கு அனுப்ப விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் கிலோ 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். 20 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்தால் மட்டுமே ஒரளவுக்கு லாபம் ஈட்ட முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு ஏக்கரில் கத்தரிக்காய் சாகுபடி செய்ய 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post