லஞ்ச புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் அவரது குடும்பதினரின் பெயரில், எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என கேட்டு, பத்திரப்பதிவுத் துறைக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சுற்றுசூழல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பாண்டியன். இவர் மீது எழுந்த லஞ்ச புகாரைத் தொடர்ந்து, அவரது அலுவலகம் மற்றும் வீட்டில், கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதி லஞ்ச ஒழிப்ப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத 7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், சுமார் 3 கோடி மதிப்புடைய தங்க, வைர மற்றும் வெள்ளி பொருட்கள் சிக்கியது.
மேலும், ஒரு கோடியே 37 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வங்கி கணக்கில் இருந்த 75 லட்ச ரூபாய் முடக்கப்பட்டது. இதனையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவரிடம், விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர், பத்திரப்பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், பாண்டியன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், அடுத்த வாரம் பாண்டியனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Discussion about this post