இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ மசோதாவை, சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்’ எனப்படும் கீழ்சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை ஆதரித்து 358 ஓட்டுக்களும், எதிராக 234 ஓட்டுக்களும் விழுந்தன.
இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா அடுத்த ஆண்டு ஜனவரியில், மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அடுத்தாண்டு ஜனவரி 3ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, இங்கிலாந்து முறைப்படி வெளியேறும் என தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post