சென்னை நந்தனம் பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை நந்தனத்தை சேர்ந்த இளவரசி என்பவர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் நான்கரை சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 26 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு, தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தேனாம்பேட்டையை சேர்ந்த குள்ள சூர்யா என்பது தெரியவந்தது. பின்னர் சூர்யாவை பிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்து புழல் சிறையிலடைத்தனர்.
Discussion about this post