சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை இரவு முழுவதும் பணிபுரிந்து சரி செய்த ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
புழல் நீரேற்று நிலையத்திலிருந்து, திருமுல்லைவாயல் செல்லும் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக சாலையில் நீர் வீணாகி கொண்டிருந்தது. குழாயின் மூலம் ஆவடியில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலை குடியிருப்பு, விமானப்படை, மத்திய அதி விரைவுப்படை, ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 17 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் எற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள், தொடர்ந்து 15 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்து குழாயில் ஏற்பட்ட 12 அடி அளவிலான உடைப்பை சரி செய்தனர். இரவு முழுவதும் பணி புரிந்து உடைப்பை சரி செய்த பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Discussion about this post