உலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை அமெரிக்காவின் 7 வயது சிறுவன் பெற்றுள்ளான்.
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளான்.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்துள்ளான். சாதனை சிறுவனின் தந்தை ருடால்ப் இது பற்றி கூறும் போது, எனது மகன் கடினமாக பயிற்சி செய்து இந்த சாதனையை படைத்துள்ளான். எந்த அளவிற்கு ஓடுவதில் கவனம் செலுத்துகிறானோ அந்த அளவிற்கு படிப்பிலும் கவனம் செலுத்துகிறான் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.
மற்ற சிறுவர்களை காட்டிலும் ருடால்ப் குறிப்பிட்ட இலக்கை ஓடி முடித்துவிடுகிறான். சிறுவனின் இந்த ஓட்டம் உலகின் வேகமான மனிதன் என்று பெயரெடுத்த உசேன் போல்ட் வேகத்திற்கு இணையானது என்று உடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிறுவன் ருடால்ப் கூறும்போது, நான் பயிற்சி செய்யும் போது பந்தயத்தில் ஓடுவது போலவே பயிற்சி செய்வதால் என்னால் வெற்றியை அடைய முடிந்தது என்று கூறுகிறார். இந்த சாதனை தொடரும் என்றும் இதை விட மிக குறைந்த நொடிகளில் பந்தைய இலக்கை முடிப்பேன் என்றும் ருடால்ப் கூறுகிறார்.
Discussion about this post