ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன. இதனைதொடர்ந்து, 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கி உள்ளது. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விஹாரி 8 ரன்களிலும், 76 ரன்களில் மானிக் அகர்வாலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த புஜாரா 68 ரன்களும், கேப்டன் விராட் கோலி 47 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
Discussion about this post