வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் கட்சிகளின் முகவர்கள் செல்போன்களை கொண்டு வர அனுமதி கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்த அவர், சட்டமன்ற தொகுதிகளில் குலுக்கல் முறையில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, விவிபாட் உடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என்றார். 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 15 ஆயிரத்து 904 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சத்யபிரதா சாஹூ கூறினார்.
ஒரு மையத்தில் ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கூரான பொருட்களை கொண்டு வர அனுமதி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். அதிகாரிகளை தவிர்த்து, மற்றவர்கள், முகவர்கள் செல்போனை பயன்படுத்த அனுமதி கிடையாது என்று அவர் கூறினார்.
Discussion about this post