தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக போக்குவரத்துறை சார்பில் 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 66 ஆயிரத்து 773 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு 3 நாட்களுக்கு நாட்கள் நடைபெறவுள்ளது. கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 24 முதல் 26ம் தேதி வரை 4 ஆயிரத்து 265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Discussion about this post