ஜப்பானிய முறையில் வளரும் போன் சாய் மரங்களை சிவகாசியை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ஆர்வமுடன் வளர்த்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி ஆசிரியர் ராஜ்கமல் தனது வீட்டில் குறுகிய இடத்தில் 250க்கும் மேற்பட்ட போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார். ஆலமரம், அரசமரம், புளியமரம் போன்றவைகளை போன்சாய் வகையில் 40 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். பருவத்தில் காய் காத்தும், பெரிய மரங்களை காட்டிலும் விளைச்சல் குறைவாக இருக்கும் ஆனாலும் சுவை மிகுந்து இருக்கும் என்று ராஜ்கமல் கூறுகிறார். போன்சாய் மரங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இவர் தனது வீட்டில் போன்சாய் மரங்களை வளர்ப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை ஆர்வத்தையும், ஆச்சர்யத்தில் ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post