மும்பை பங்குச்சந்தை பங்கு விலைக் குறியீடு இன்று 40 ஆயிரத்து 392 என்கிற புதிய உச்சத்தை முதன்முறையாகத் தொட்டு சாதனை படைத்துள்ளது.
நேற்றைய வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து, 40 ஆயிரத்து 52 ஆக இருந்தது. இன்று நண்பகல் வாக்கில் 340 புள்ளிகள் அதிகரித்து 40 ஆயிரத்து 392 என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பின் வணிகநேர முடிவில் 40 ஆயிரத்து 129 புள்ளிகளாக இருந்தது. எஸ்பேங்க் பங்கு விலை 24 விழுக்காடு உயர்ந்தது. எஸ்பிஐ, இன்போசிஸ், டாட்டா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், எச்சிஎல் டெக்னாலஜீஸ் ஆகியவற்றின் பங்கு விலைகள் அதிகரித்தன. இதேபோல் தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி இன்றைய வணிகநேர முடிவில் 37 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 881ஆக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் ஏழாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ததே பங்குச்சந்தையின் ஏற்றத்துக்குக் காரணமாகும்.
Discussion about this post