மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

மதுரை ரயில் நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக அச்சுறுத்தல் எழுந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ரயில்வே நிலையங்களில் பாதுகாப்பு சோதனையை தீவிரப்படுத்த இந்திய ரயில்வே அறிவுறுத்தியது. இந்நிலையில் மதுரை ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

ரயில்களில் பயணிகள் இருக்கை, பயணிகள் தங்குமிடம், நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றில் சோதனை செய்தனர். பயணிகள் கொண்டுவரும் பை உள்ளிட்ட உடைமைகளும் உரிய சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றது.

Exit mobile version