மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை ரயில் நிலையத்தில் பெண் பயணி ரயிலில் சிக்கிய விபத்தின் எதிரொலி பயணிகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ரயில்வே காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மதுரை ரயில்வே நிலையத்தில் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸில், விஜயபூர்ணிமா என்ற பயணி தூக்க கலக்கத்தில் ரயில் நிற்பதற்கு முன்பாகவே இறங்க முயன்றுள்ளார். அப்போது கீழே விழுந்து ரயிலில் சிக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சிறு காயத்துடன் மீட்கப்பட்டார்.

இந்நிலையில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பயணிகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பயணிகளுக்கு துண்டு பிரச்சுரம் வழங்கிய ரயில்வே காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பயணிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version