இரட்டைக் குடியுரிமை விவகாரம்: அக்‌ஷய் குமார் விளக்கம்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தன் மீது எழுந்துள்ள இரட்டைக் குடியுரிமை சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இந்திய மற்றும் கனடா நாட்டு குடியுரிமைப் பெற்றுள்ளதை வைத்தும், சில ஆண்டுகளுக்கு முன்பு கனடா தனது இரண்டாவது வீடு, சினிமாவிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கனடாவில் செட்டில் ஆகிவிடுவேன் என பேசியதையும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு விளக்கமளித்துள்ள அக்‌ஷய் குமார், கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ளதை எந்த இடத்திலும் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக கனடாவுக்கு செல்லவில்லை என்றார். இந்தியாவில் பணியாற்றி இங்கேயே வரி செலுத்துவதாகவும், அதனால் தனக்கு இந்தியா மீது இருக்கும் தேசப்பற்றை யாரிடமும் நிரூபிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று அக்‌ஷய் குமார் குறிப்பிட்டுள்ளார். சிலர் தேவையில்லாமல் இதை சர்ச்சையாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version