பொலிவியா அதிபர் ஜியானின் அனேஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் சாமானிய மக்கள் மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தாம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிவியா அதிபர் ஜியானின் அனேஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தாம் நலமுடன் இருப்பதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 4 அமைச்சர்களை தொடர்ந்து, அதிபர் அனேசுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ((ஏற்கனவே தென் அமெரிக்கா நாடான பிரேசில் அதிபர் ஜெர் போல்சனரோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ))
Discussion about this post