2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பண மதிப்பிழப்பை மோடி அறிவித்தார். இதனால், கறுப்பு பணம் தடுப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதி தடை, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு, வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல பயன்கள் ஏற்பட்டன.
நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வர, ஜி.எஸ்.டி. எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறை, 2017 ஜூலை, 1ம் தேதி அமல் செய்யப்பட்டு, 5, 12, 18, மற்றும் 28 சதவீதம் என்ற விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.
காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், 2019 பிப்ரவரி 14 ஆம் தேதி, ரோந்து சென்ற சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனம் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 வீரர்கள் மரணம் அடைந்தனர். இதற்கு, பதிலடி தரும் விதமாக, பிப்ரவரி 26 ஆம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட்டில் புகுந்து, பயங்கரவாத முகாமை மீது, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது.
ஜனவரி 12 ஆம் தேதி எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவுகளில் வராதவர்களில், ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள, உயர் ஜாதியினருக்கு, பொருளாதார அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
முஸ்லிம்கள் மூன்று முறை, தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை குற்றமாக்கும், முத்தலாக் தடை சட்டம், ஜூலை 30ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும், பிரிவு 370, ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள மிக துணிச்சலான முடிவுகளாக பார்க்கப்படுகிறது.