பட்டுக்கோட்டையில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி படகு போட்டி நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி பட்டுக்கோட்டை அடுத்த மல்லிபட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் தேர்தலில் 100 சதவிகிதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி படகு போட்டி நடைபெற்றது. போட்டியை தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கிவைத்தார்.
கடலில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று அங்கு வைக்கபட்டிருந்த எல்லையை தாண்டி மீனவர்கள் திரும்ப கரைக்கு வந்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது.
Discussion about this post