சூடான் தலைநகர் கார்டவும் பகுதியில் சிறுவர்கள் படகின் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம். தலைநகரிலிருந்து 750 கிலோ மீட்டர் வடக்கே அமைந்த நைல் நதி கரையில் 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், இயந்திர கோளாறு காரணமாக பாதி வழியில் பழுதாகி நின்ற படகு திடீரென தண்ணீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், படகில் பயணம் செய்த பள்ளி சிறுவர்களில் 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவரும் பலியாகி உள்ளதாகவும் தெரிய வருகிறது. இதையடுத்து உயிரிழந்த சிறுவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் படகு விபத்து -22 பேர் பலி
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: சூடான்படகு விபத்து
Related Content
ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு
By
Web Team
September 15, 2019
சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் : 19 பேர் பலி
By
Web Team
December 28, 2018