தென் கொரியாவில் பி.எம்.டபிள்யூ கார்கள் தீப்பிடித்து எரிந்த விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு 69 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் பி.எம்.டபிள்யூ கார்கள் தீப்பிடிப்பதாக புகார்கள் எழுந்தன . 40 புகார்கள் பெறப்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கார்கள் திருப்ப பெறப்பட்டன. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தென் கொரிய அரசு விசாரணை நடத்தியது. அதில் பி.எம்.டபிள்யூ நிறுவனம் தவறை மறைக்க முயற்சி செய்ததாகவும், வாகனங்களை திரும்ப பெற தாமதம் செய்ததாகவும் கூறப்படுள்ளது. இதற்காக பி.எம்.டபிள்யூ நிறுவனத்திற்கு 69 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென்கொரிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Discussion about this post