கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் எண்ணற்ற வண்ண மலர்கள் இருந்தாலும், 12 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்க கூடிய நீல குறிஞ்சி மலர் தற்போது பூத்துள்ளது. கடந்த ஆண்டு குறிஞ்சிமலர் சீசன் முடிவடைந்த நிலையில், பிரையண்ட் பூங்காவில் குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்குகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறிஞ்சி மலர்களை வியப்புடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
Discussion about this post