எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விருதுநகரைச் சேர்ந்த பெண்ணின் குழந்தைக்கு, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்க ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் எடை சீராக உள்ளதாகவும், ரத்த மாதிரிகள் வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார். பரிசோதனை முடிவுகள் 4 வாரத்தில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post